கமல்ஹாசன் அரசியலை நான் விரும்புகிறேன்: ராகுல் காந்தி பேட்டி

rahul kamal
கமல்ஹாசன் அரசியலை நான் விரும்புகிறேன்: ராகுல் காந்தி பேட்டி
siva| Last Updated: செவ்வாய், 2 மார்ச் 2021 (22:19 IST)
கமல்ஹாசன் அரசியலை நான் மிகவும் விரும்புகிறேன் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தமிழ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கிறார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பேன் என்ற வாக்குறுதியை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமல்ஹாசன் அரசியல் குறித்து தமிழக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறிய போது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை கமலஹாசன் தீவிரமாக எதிர்க்கிறார். தமிழகத்தில் அவர்களை நுழைய விடாமல் தடுக்கும் முயற்சியும் செய்து வருகிறார் அவரை நான் ஒரு மதச்சார்பற்ற மனிதராகவே பார்த்து வருகிறேன்

எனவே அவருடைய அரசியலை நான் மிகவும் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் குறித்து ராகுல் காந்தி கூறிய இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :