இன்றுமுதல் மீண்டும் பிரச்சாரம்: டுவிட்டரில் பாடலை வெளியிட்ட கமல்!

kamalhasan
இன்றுமுதல் மீண்டும் பிரச்சாரம்: டுவிட்டரில் பாடலை வெளியிட்ட கமல்!
siva| Last Updated: புதன், 3 மார்ச் 2021 (13:22 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்
இதன் பின் ஓய்வு எடுத்துக் கொண்ட கமல்ஹாசன் இன்று முதல் மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். இன்று மாலை 3 மணிக்கு ஆலந்தூரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் கமல்ஹாசன் இரவு 8 மணிக்கு மைலாப்பூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்


இந்த பொதுக்கூட்டம் குறித்த இந்த கமல்ஹாசனின் இந்த தேர்தல் பிரச்சாரம் குறித்த அறிவிப்பு அட்டவணை வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கவிருக்கும் நிலையில் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் தமிழக மக்கள். ‘பேட்டரி டார்ச்’ சின்னத்திற்கு வாக்கு கேட்டு களமிறங்கிவிட்டது எம்மவர் படை. தலை நிமிரட்டும் தமிழகம். வெற்றி நமதே! என குறிப்பிட்டு ஒரு பாடலையும் பதிவு செய்துள்ளார். அந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது
இதில் மேலும் படிக்கவும் :