உடலுக்கு தடுப்பூசி போட்டாச்சு.. ஊழலுக்கு தடுப்பூசி எப்போ? – கமல்ஹாசன் ட்வீட்!

Kamalhassan
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 2 மார்ச் 2021 (12:58 IST)
சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள கமல்ஹாசன் ஊழலுக்கு தடுப்பூசி போட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டிவிட்ட நிலையில் முன்னதாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக வயதானவர்கள், அரசியல் பிரமுகர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :