சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஆதரவு முழக்கமா? முதல்வர் அதிர்ச்சி..!
கர்நாடக சட்டசபையில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த வீடியோ உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கர்நாடக சட்டப்பேரவையில் மாநிலங்களவை தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் ஹூசேன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவரை சுற்றி இருந்த சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக தனியார் சேனல் ஒன்றில் செய்தி வெளியானது
காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பியது ஏன் என்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்து முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் அந்த வீடியோ ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் கிடைத்ததும் அதன் உண்மை தன்மை குறித்து அறிந்து அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் இந்த விவகாரத்தை கண்டித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் நேற்று சட்டசபையில் அமலியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
Edited by Siva