வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (18:04 IST)

பொன்முடி தொகுதியை காலியானதாக அறிவிக்க கோரி கடிதம்.. பேரவைச் செயலர் முடிவு என்ன?

Ponmudi
முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் அளிக்கப்பட்ட நிலையில் பேரவை செயலாளர் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

அதிமுக தான் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது ’சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு அவருக்கு தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

ஆனால் இன்றுவரை பொன்முடியை தகுதி நீக்கம் செய்யவில்லை, அவரது தொகுதி காலியாக இருக்கிறது என்றும் அறிவிக்கவில்லை, அதை அறிவிக்க வேண்டியது சபாநாயகரின் கடமை, எனவே அதை உடனடியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருக்கிறோம்

சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்களுக்கு தான் இந்த கடிதத்தை கொடுக்க வந்தோம், ஆனால் அவர் இல்லை என்பதால் பேரவை செயலாளரிடம் அதை அளித்துள்ளோம். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்’ என்று கூறினார்

Edited by Mahendran