தொடர்புடைய செய்திகள்
- சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்து: அமைச்சர் உதயநிதி மீது உ.பி.யில் வழக்குப்பதிவு
- தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட பிறப்பித்த உத்தரவு: ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
- செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
- பாஜக நிர்வாகி தீக்குளிப்பு....காவல்துறைக்கு அண்ணாமலை எச்சரிக்கை
- உதயநிதி மீது சுப்ரீம் கோர்ட் தானாக வழக்கு தொடர வேண்டும்: ஓய்வு பெற்ற 262 நீதிபதிகள் கடிதம்..!
தாமாக முன்வந்து எடுத்த அமைச்சர் பொன்முடி வழக்கு.. வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை..!
சமீபத்தில் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்த நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தானாக முன்வந்து விசாரிக்க எடுத்த வழக்கில் தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதியை விசாரிக்க அனுபவிப்பதா என்பது குறித்து செப்டம்பர் 14ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது
தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தெரிவித்த கருத்துக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதாக உள்ளது என லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
Edited by Siva
