புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 செப்டம்பர் 2018 (20:31 IST)

ஒருசில நிமிடங்களில் முடிந்த பொங்கல் ரயில் முன்பதிவு

தீபாவளி உள்பட முக்கிய விசேஷங்களுக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு முன்பதிவு செய்ய அனைவரும் முண்டியடித்து வரும் நிலையில் ஒருசில நிமிடங்களில் இந்த ரயில் டிக்கெட்டுக்களின் விற்பனை முடிந்துவிடும் என்பது தெரிந்ததே

அந்த வகையில் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனவரி 11ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு சற்றுமுன் தொடங்கியது. பொங்கல் பண்டிகைக்கு முந்தய தினம் போகிப்பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என தொடர் விடுமுறை வருவதால் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு ஒருசில நிமிடங்களில் முடிந்தது

குறிப்பாக சென்னையிலிருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஊர்களுக்கு செல்லும் டிக்கெட்டுக்கள் ஒருசில நிமிடங்களில் காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது. இந்தநிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், 13ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது என்பதும் இந்த டிக்கெட்டுக்களும் ஒருசில நிமிடங்களில் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.