1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 10 ஜூலை 2018 (13:43 IST)

அரசு எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் தட்கள் முன்பதிவு அறிமுகம்

ரயில்களில் பயணம் செய்ய உள்ள தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையை தமிழக அரசு எஸ்பிரஸ் பேருந்துகளில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
தமிழக அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் கூறி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 
 
இதற்காக உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து சில பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது. அதில், தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் இந்த திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்கல் முறையை அமல்படுத்தினால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் வருவாய் பெற முடியும் என்று கருதப்படுகிறது.
 
நீண்ட தூர பயணிக்கும் பேருந்துகளில் இந்த தட்கல் முறை முதற்கட்டமாக விரைவில் அமலுக்கு வர உள்ளது.