1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (08:27 IST)

ஏழே நிமிடங்களில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட்: பயணிகள் அதிருப்தி

தீபாவளி விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் என்ற அறிவிப்பு நேற்றே வெளிவந்தது. இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட பல்வேறு ஊர்களுக்கு செல்பவர்கள் இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வமாக காத்திருந்தனர்.
 
தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் தங்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைக்கும் என பயணிகள் நினைத்திருந்தனர்.
 
ஆனால் இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியவுடன் ஏழே நிமிடத்தில் அதாவது 08,07 மணிக்கே அனைத்து டிக்கெட்டுக்களும் முன்பதிவு செய்து முடிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி திருநாள் உள்ள நிலையில் இன்று நவம்பர் 2ஆம் தேதிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகிவிட்டது. நாளை நவம்பர் 3ஆம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும். அதிலாவது தங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்ளனர்