வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (08:25 IST)

பொங்கல் மதுவிற்பனை: சாதனை செய்த டாஸ்மாக்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் விடுமுறையில் டாஸ்மாக் விற்பனை இலக்கு வைத்து விற்பனை செய்துவரும் நிலையில் கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி டாஸ்மாக்கில் 606 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இந்த விற்பனைத் தொகை கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.500 கோடிக்கு மேல் டாஸ்மாக் மது விற்பனை நடத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக 606 கோடியே 72 லட்ச ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
மேலும் இன்றைய விற்பனையையும் சேர்த்தால் இன்னும் விற்பனை தொகையின் அளவு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது ஒவ்வொரு ஆண்டும் மதுவிற்பனை அதிகரித்துக்கொண்டே போவது தமிழக அரசுக்கு வருமானமாக இருந்தாலும் இந்த மதுவால் பொதுமக்களுக்கு ஏற்படும் கேடுகள், அதன் விளைவால் ஏற்படும் உடல்நல கோளாறு மற்றும் மருத்துவச் செலவுகள் இதைவிட அதிகமாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்