1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (12:07 IST)

மாநில தலைவர் இல்லாமலே தேர்தலில் போட்டியிடுவோம்! – பொன்னார் நம்பிக்கை!

பாஜக மாநில தலைவர் இல்லாதபோது சரியான திட்டமிடலோடு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவிருப்பதாக தமிழக பாஜக பிரமுகர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் பாஜகவுக்கு தமிழக தலைவர் இன்னமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மாநில தலைவர் இல்லாமல் பாஜக உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன் ”கடந்த 2011 உள்ளாட்சி தேர்தலின்போது பாஜக செல்வாக்கு இல்லாமல் இருந்தது. அப்போதே இரண்டு இடங்களில் வெற்றிபெற்றோம். தற்போது நரேந்திரமோடி தமிழகத்துக்கு பல மகத்தான திட்டங்களை வழங்கியிருக்கிறார். தமிழை உலகமெங்கும் கொண்டு சென்றிருக்கிறார். அதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் “மாநில தலைவர் இல்லாமலே தேர்தல் வியூகம் வகுத்து செயல்பட பாஜகவுக்கு திறன் இருக்கிறது. மாநில தலைவர்கள் இல்லாவிட்டாலும் மத்திய தலைவர்கள் பாஜகவை திறம்பட வழிநடத்துவார்கள். பாஜகவை பொறுத்தவரை மாநில தலைவர் இல்லை என்பது ஒரு பிரச்சினையே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.