திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2019 (09:00 IST)

சிவசேனாவின் மத்திய அமைச்சர் திடீர் ராஜினாமா? மகாராஷ்டிராவில் என்ன நடக்கும்?

மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் முடிவடைந்து சுமார் ஒரு மாதம் ஆகியிருக்கும் நிலையில் இன்னும் அம்மாநிலத்தில் புதிய ஆட்சியில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மகாராஷ்டிர ஆளுநர் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து விரைவில் பாஜக ஆட்சிப்பொறுபை ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எ
 
இந்த நிலையில் பாஜகவின் மத்திய அரசில் அமைச்சராக இருக்கும் சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த் என்பவர் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார். தற்போது மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனம் துறை அமைச்சராக இருக்கும் அரவிந்த் சாவந்த், ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால் பாஜக உடனான உறவை சிவசேனா நிரந்தரமாகவே முறிக்க முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது
 
மேலும் தேசிய வாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி ஏற்படுத்த சிவசேனா கட்சி முயன்ற போது தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு நிபந்தனை வைத்ததாகவும் மத்திய அரசிலிருந்து சிவசேனா வெளியே வந்தால், கூட்டணி ஆட்சி பற்றி யோசிக்கலாம் என்று கூறியதாகவும் செய்திகள் வெளிவந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டே மத்திய அரசில் இருந்து சிவசேனா வெளியே வந்திருப்பதாக கூறப்படுகிறது
 
மத்திய அரசிலிருந்து சிவசேனா தற்போது வெளியே வந்துள்ளதால் சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்த  முடிவை இன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது