1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (19:11 IST)

எம்.ஜி.ஆருக்குப் பின் சசிகலா தான்: பொன் ராதாகிருஷ்ணன்

எம்ஜிஆருக்கு பின் மிகப்பெரிய எழுச்சியை சசிகலாவுக்கு தான் உள்ளது என பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சசிகலாவின் வருகையை அதிமுக விரும்பாமல் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் முத்த தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் சசிகலாவை பேட்டி ஒன்றில் பெருமையாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
பெங்களூரில் இருந்து சசிகலா தமிழகத்திற்கு வந்தபோது மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது பெரிய எழுச்சியாக நான் கருதுகிறேன் என்றும், இது அவர்களின் கட்சிக்கு பலமுள்ளதாக இருக்கும் என்றும் இதற்கு முன்பு எம்ஜிஆருக்கு இதுபோன்ற வரவேற்பு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்றும் எம்ஜிஆருக்கு பின் சசிகலாவுக்கு தான் அந்த வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
 
அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வரும் சசிகலா குறித்து பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது