செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:07 IST)

சசிகலா கட்சியில் சேரத் தயார்… ஆனால் இந்த பதவி வேண்டும் – சந்தானம் கலகல பேச்சு!

நடிகர் சந்தானம் தான் நடித்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின்  பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார்.

நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஜான்சன். கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை கே.குமார் என்பவர் தயாரித்துள்ளார்.  இவர் நடிகர் சூரியின் மேனேஜர் ஆவார். இப்படம் காமெடி ஜர்னலில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. கானா பாடகராக இந்த படத்தில் சந்தானம் நடித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணின் இசை பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள நிலையில் இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொண்ட சந்தானம் படம் பற்றி பேசினார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் குறும்பாக ‘சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்து விட்டார். அவர் கட்சியில் சேர்வீர்களா?’ எனக் கேட்க, அதற்கு பதிலளித்த சந்தானம் ‘ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தால் சேர்வேன்’ என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.