திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (18:47 IST)

கருணாநிதி இல்லாத திமுகவில் முன்னேற்றமும், கழகமும் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமின்றி இருந்த நேரத்திலும் அவரது மறைவிற்கு பின்னரும் திமுக மக்களை ஈர்க்கும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு வரூகிறது. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, டெபாசிட் பறிபோனது பல திமுகவினர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  கருணாநிதி இல்லாத திமுகவில் திராவிடம் மட்டுமே இருப்பதாகவும், அக்கட்சியில் முன்னேற்றமும், கழகமும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இன்று தனது சொந்த தொகுதியான நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், 'நட்பு வேறு. அரசியல் வேறு என்றும் கூடா நட்பு கேட்டில் முடியும் என காங்கிரஸை நோக்கித்தான் கருணாநிதி சொன்னார். ஆனால் அந்த கட்சியுடன் திமுக தற்போது நெருக்கமாக இருக்கின்றது என்று குற்றஞ்சாட்டினார்.