புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஜூலை 2019 (08:53 IST)

அத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல கலெக்டர் யார்? பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் ஒரு சிலர் கூட்ட நெரிசலில் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து காஞ்சிபுரம் கலெக்டர் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோர் அத்திவரதரை தரிசிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறியிருந்தார்
 
கலெக்டரின் இந்த அறிவிப்புக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம் அடைந்து உள்ளார். அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களை தரிசனம் செய்ய வேண்டாம் என சொல்வதற்கு காஞ்சிபுரம் கலெக்டர் யார்? அவருக்கு இவ்வாறு கூற கலெக்டருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக கோவிலுக்கு கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், வரவேண்டாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கும் விளம்பரத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும் இது தமிழகத்துக்கு ஏற்பட்ட தலைகுனிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, உணவு ஏற்பாடு ஆகிய அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளை கூட இதற்கு உதவிக்கு அழைத்துக் கொள்ளலாம் என்றும் பொன்ராதாகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார்