திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2019 (12:50 IST)

அத்திவரதரின் ரியல் ஃபேஸ்: ஒப்பனையில்லா புகைப்படம் வெளியானது!

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அருள்பாளிக்கும் அத்திவரதரின் ஒப்பனையில்லா புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் அனந்தசரஸ் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி எழுந்தருளிய அவர் தற்போது 2019 ஆம் ஆண்டு மீண்டும் எழுந்தருளியுள்ளார். 
 
கடந்த ஜூலை 1 ஆம் தேதி துவங்கி ஆகஸ்டு 17 ஆம் தேதி வரை 48 நாட்கள் பக்கதர்களுக்கு தரிசனம் வழங்கி வருகிறார். அத்திவரதரை தரிசிக்க 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். 
அத்திவரதரை ஒப்பனையோடு தரிசிக்கும் பக்தர்களுக்கு அவர் ஒப்பனையில்லாமல் எப்படி இருப்பார் என பார்ப்பதற்கு ஆவல் இருந்திருக்கும். அதை தீர்க்கும் பொருட்டு அத்திவரதர் குளத்தில் இருந்து எடுத்து சுத்தம் செய்தபின் அலங்காரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 
இந்த புகைப்படத்தில் அத்திமரத்தின் சுழிகளும், அழகிய வேலைப்பாடுகளும் தெளிவாக தெரிகிறது.