புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (09:02 IST)

அத்திவரதரை தரிசிக்க மோடி வருகிறாரா? கலெக்டர் விளக்கம்

உலகப் புகழ் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்து வருகிறார். 48 நாட்கள் நடக்கும் இந்த அத்தி வரதர் தரிசனத்திற்காக இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரம் குவிந்த வண்ணம் உள்ளனர். அது மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வர தொடங்கி உள்ளனர்
 
இந்த நிலையில் ஏற்கனவே அத்திவரதரை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தரிசனம் செய்து விட்ட நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி காஞ்சிபுரம் வர உள்ளதாகவும் அவர் 24ஆம் தேதி சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதரை தரிசிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதனால் 23, 24 ஆகிய தேதிகளில் பொதுமக்களுக்கு அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி இருக்காது என்றே கூறப்பட்டது
 
ஆனால் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். அத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி காஞ்சி வருவதாக வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் பக்தர்கள் வழக்கம்போல் அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என்றும், பிரதமர் வருகை தருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்