வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (14:19 IST)

பொள்ளாச்சி பாலியியல் வழக்கு முக்கிய குற்றவாளி திருநாவுகரசின் ஜாமீன் மனு நிராகரிப்பு

பொள்ளாச்சியில் பாலியியல் வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுகரசின் ஜாமீன் மனுவை நீதிபதி ஆறுமுகசாமி நிராகரித்தார்.


 
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கடந்த 25-ந் தேதி ஜோதி நகரில்  போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு போலீசில் சிக்காமல் தலைமறைவானார். இதற்கிடையில் கடந்த 5-ந்தேதி தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை போலீசார் மாக்கினாம்பட்டியில் வைத்து கைது செய்தனர்.
 
இந்த நிலையில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோருக்கு நேற்றுடன் 15 நாட்கள் காவல் முடிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று மீண்டும் பொள்ளாச்சி ஜே.எம்.1 மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகம் 3 பேருக்கும் மேலும் 15 நாட்களுக்கு காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து  சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் திருநாவுக்கரசுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாய் லதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதே இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு  வந்தது. அப்போது பாலியியல் வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுகரசின் ஜாமீன் மனுவை நீதிபதி ஆறுமுகசாமி நிராகரித்தார்.