1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pollachi issued changed to CBCID issue

பொள்ளாச்சி விவகாரம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!!

பொள்ளாச்சிவிவகாரம்
பொள்ளாச்சி விவகாரம் தமிழகத்தையே உலுக்கியிருந்த நிலையில் அந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
 
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக கிட்டதட்ட 200 பெண்களை மிரட்டி  பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர் 20க்கும் மேற்பட்ட அயோக்கியர்கள். இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவன்கள் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
 
இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இந்த வழக்கை போலீஸார் விசாரித்து வந்த நிலையில். வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.