திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (10:36 IST)

என் பேரை கெடுத்துட்டாரு.. இழப்பீடு தந்தே ஆகணும்! – ஸ்டாலின் மீது பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது துணை சபாநாயகர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பொள்ளாச்சியில் கும்பல் ஒன்று இளம்பெண்களை படமெடுத்து மிரட்டுதல், பாலியல் வன்கொடுமை செய்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் இந்த குற்ற செயலில் அதிமுகவினருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தொடர்புபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் தற்போது நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். எந்த ஆதாரமும் இன்றி தன் மேல் குற்றம் சாட்டி டன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆகஸ்ட் 18ம் தேதிக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.