1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (08:57 IST)

காம்ப்ளான் பாக்கெட்டில் கிடந்த பல்லி; சிறுவன் மருத்துவமனையில் அனுமதி!

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் மருந்தகம் ஒன்றில் வாங்கிய காம்ப்ளான் பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரியும் இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த மாதம் செல்வபுரம் பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் காம்ப்ளான் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார் கார்த்திக்.

அதை குழந்தைகளுக்கு சுகன்யா அடிக்கடி பாலில் கலந்து கொடுத்து வந்த நிலையில் சமீபத்தில் காம்ப்ளான் பாக்கெட்டை திறந்து பார்த்தபோது aதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் சுகன்யா. முன்னதாக தனது சின்ன பையனுக்கு காம்ப்ளான கலந்து கொடுத்ததால் உடனடியாக அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காம்ப்ளான் பாக்கெட்டில் பல்லி கிடந்தது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.