மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழக மாணவர்கள் மீது தடியடி
பல்கலைகழக நிர்வாகத்தின் முடிவுகளுக்கு எதிராக ஊர்வலம் சென்ற் மீ.சு. பல்கலைகழக மாணவர்கள் மீது போலிஸ் தடியடி
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் தனது கட்டுபாட்டில் உள்ள 89 கல்லூரிகளிலும் ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று இருந்த நடைமுறையை மாற்றி தமிழில் தேர்வு எழுத தடை விதித்து கடந்த மாதம் அறிவித்தது. அதுமட்டுமல்லாமல் தேர்வுக் கட்டணங்களையும் உயர்த்தி அறிவித்திருந்தது.
இதற்கு மாணவர்களும் மாணவர் சங்க அமைப்புகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த முடிவுகளை உடனடியாக திரும்பப் பெற தீவிரமாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதனை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டு பல்கலைக் கழகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.
அப்போது அங்கு வந்த காவல்துரையினர் அந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்த முயன்றபோது மாணவர்களுக்கும் காவல்துரையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் போலிஸ் மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.