குடும்பத்துடன் தப்பித்துக்கொண்ட சூப்பர் ஸ்டார்...

Sinoj| Last Updated: சனி, 21 நவம்பர் 2020 (23:17 IST)

கொரொனா தொற்று இறப்பு விகிதமும் பரவல் விகிதமும் ஓரளவு குறைந்திருந்தாலும் முழுவதுமாகக் குறையவில்லை.

இந்நிலையில் பிரபலங்கள் முதல் சாதாரணமக்கள் வரையிலும் பலரும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,
நடிகர் சல்மானுக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஒரு தகவல் பரவியது. இதனா அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சல்மான்கானின் டிரைவர் மற்றும் இரண்டு பணியாளர்களுக்குத்தான் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

அதில், சல்மான்கான் உள்பட அவரது குடும்பத்தினர் யாருக்கும் கொரொனா தொற்று இல்லைஎன்று நெகட்டிவ்
உறுதியானது. இருந்தாலும் சல்மான்கான் தானும் தனது குடும்பத்தினரும் இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளனராம்.இதில் மேலும் படிக்கவும் :