தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!
சென்னை சோழவரத்தை அடுத்த பூதூர் மாரம்பேடு பகுதியில் ரவுடி முத்து சரவணன் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசாரை தாக்கிவிட்டு ரவுடி முத்து சரவணன் தப்ப முயன்ற போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ரவுடி முத்து சரவணன் உயிரிழப்பு என தகவல்.
மேலும் மற்றொரு ரவுடி சதீஷ் என்பவர் படுகாயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 போலீசாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட ரவுடிகள்
இருவரும் சென்னை அழைத்து வந்த நிலையில், அவர்கள் தப்ப முயன்றதாகவும், இதனால் என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் சென்னை அழைத்து வந்த நிலையில், அவர்கள் தப்ப முயன்றதாகவும், இதனால் என்கவுண்டர் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Edited by Siva
