1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Police corruption grocery store blocking in paddy

போலீஸ் கெடுபிடி… நெல்லையில் மளிகை கடைகள் அடைப்பு !

Police corruption
போலீஸ் கெடுபிடிகள் அதிகம் இருப்பதாகக் கூறி நெல்லை மாவட்டத்தில் மளிகைக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சில்லரை வியாபாரிகளும், நெல்லை நகர் பகுதியில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் பொருட்கள் வாங்க அதிகாலை முதலே கூட்டமா குவிகின்றனர்.

இதையடுத்து, அப்பகுதியில் வியாபாரிகள் கூட்டமாகக் காணப்படுவதால், போலிஸார் ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா ரூ.500 அபராதம் விதிப்பதாகவும், அவர்களை அவமரியாதையுடம் நடத்துவதாகவும் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று மணிக்கணக்கில் காக்க வைப்பதாக புகார் எழுகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்ட அனைத்து வியாபாரிகளும் ஒன்றுகூடி இன்று முதல் கடைகளை திறக்கக் கூடாது என முடிவு செய்து சுமார் 40 கடைகளை மூடியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
கொரோனாவின் மோசமான முகம் சமூக பரவல்: எச்சரிக்கும் அன்புமணி!