வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 24 மே 2021 (10:02 IST)

அனுமதியின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்

அனுமதியின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் இன்று முதல் தளர்வுகளற்ற முழு முடக்கம் அமலுக்கு வந்துள்ளதால், உரிய அனுமதியின்றி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.
 
இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அரசு அறிவித்துள்ள முழு முடக்கம் அமலில் இருக்கும். எனவே, வெளியே சுற்றும் நபர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலமாகவே திருப்பித் தரப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.