1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (08:57 IST)

சென்னையில் நாளை இரவு முதல் போக்குவரத்து தடை! – காவல்துறை அறிவிப்பு!

புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் நாளை இரவு முதல் சென்னையில் போக்குவரத்து தடை விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக பொதுவெளியில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடற்கரைகளிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மக்கள் பலர் மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கூடாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் நாளை இரவு 12 மணி முதல் ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய போக்குவரத்துகளை தவிர பிற போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் பயணங்களை 12 மணிக்குள் முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12 மணிக்குமேல் சுற்றி திரியும் வாகங்கள் மீது வழக்குப்பதிவு மற்றும் அபராத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.