ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (12:49 IST)

கூகுள் பே மூலம் லஞ்சம்.. கடலூர் தலைமை காவலர் சஸ்பெண்ட்..!

கடலூரில் தலைமை காவலர் கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கிய நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடலூரில் உள்ள சோதனை சாவடி ஒன்றில் வாகன சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில் அதில் தலைமை காவலர் சக்திவேல் என்பவர் அந்த வழியாக வந்த மாணவர்களின் வாகனங்களை ஆய்வு செய்தார். 
 
அப்போது அவர் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கூகுள் பே மூலம் பத்தாயிரம் லஞ்சம் கொடுத்ததை ஆதாரத்துடன் கடலூர் மாவட்ட எஸ்பிக்கு இமெயில் மூலம் மாணவர்கள் புகார் அளித்தனர். 
 
இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்பி ராஜாராம் அவர்கள் விசாரணை செய்ததில் காவலர் சக்திவேல் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கூகுள் பே மூலம் லஞ்சம் கொடுத்ததை மாணவர்கள் ஆதாரத்துடன் எஸ்பி இடம் புகார் அளித்ததை அடுத்து அந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Mahendran