திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 8 ஜனவரி 2024 (08:03 IST)

மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்.. உலக நாடுகள் ஆச்சரியம்..!

modi lakshaw
இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள்  தங்களது சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் அந்த அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவு சென்ற நிலையில் அது குறித்து மாலத்தீவில் உள்ள ஒரு சில அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். உலக அளவில் மாலத்தீவு சுற்றுலா தளமாக இருக்கும் நிலையில் மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவை  பிரதமர் மோடி உருவாக்க நினைப்பதாக அவர்கள் பகிர்ந்தனர்.
 
இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அண்டை நாட்டின் உயர்ந்த தலைவர் ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்வது தவறு என்றும் கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் இந்திய தலைவர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக சமூக வளைதளங்களில் தரக்குறைவான கருத்துகள் பதிவு செய்திருப்பதை மாலத்தீவு அரசாங்கம் கண்டிக்கிறது. இந்தக் கருத்துக மாலத்தீவு அரசின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்று கூறியுள்ளது. மேலும்  மோடிக்கெதிராக கருத்து தெரிவித்ததற்காக மரியம் ஷியூனா, மஹ்சூம் மஜித், மல்ஷா ஷரீப் ஆகிய அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva