ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2024 (19:29 IST)

கூகுள் பே தனது பிளாட்பார்மில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு கட்டணம்!

g pay
'கூகுள்  பே' தனது பிளாட்பார்மில் மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு ரூ 3 வசதிக் கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனங்களில்  முன்னணி நிறுவனம் 'கூகுள் பே'. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 'கூகுள் பே' தனது பிளாட்பார்மில் மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு ரூ 3 வசதிக் கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், பயனர்கள் 'கூகுள் பே' மூலம் பிரீபெய்டு திட்டங்களை பெறும்போது, இந்தக் கட்டணம் பொருந்தும் எனவும், இது போன்ற பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற ஆப்ஸின் இதற்கு முந்தைய கொள்கையில் இருந்து மாறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.