ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (22:28 IST)

பாமகவின் 3ஆவது பட்டியல் வெளியீடு

அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் கட்சிகளில் ஒன்றாகிய பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது ஏற்கனவே தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் இன்று காலை 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளிவந்ததை அடுத்து சற்றுமுன் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது 
 
இதன்படி மேட்டூரில் சதாசிவம் என்பவரும், பூந்தமல்லியில் ராஜமன்னார் என்பவரும், சங்கராபுரத்தில் ராஜா என்பவரும், வந்தவாசியில் முரளி சங்கர் என்பவரும் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து பாமக தனக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் நாளை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அதன் பின் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது