வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (20:41 IST)

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர் யார் யார்? இதோ விபரம்!

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளில் ஒன்றான மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என்பதும் இந்த தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடுவார்கள் என்றும் சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது
 
இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இந்த நிலையில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதிகள் குறித்த பட்டியல் ஏற்கனவே வெளியாகிய நிலையில் சற்றுமுன் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு
 
அரியலூர் - சின்னப்பா
 
மதுராந்தகம் - மல்லை சத்யா
 
பல்லடம் - முத்துரத்தினம்
 
சாத்தூர் - ரகுராம்
 
வாசுதேவநல்லூர் - சதன் திருமலைக்குமார் 
 
மதுரை தெற்கு - பூமிநாதன்