15 தொகுதிகளில் அதிமுகவுடன், 5 தொகுதிகளில் பாஜகவுடன் மோதும் காங்கிரஸ்!

congress vs bjp
15 தொகுதிகளில் அதிமுகவுடன், 5 தொகுதிகளில் பாஜகவுடன் மோதும் காங்கிரஸ்!
siva| Last Updated: வியாழன், 11 மார்ச் 2021 (19:18 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த 25 தொகுதிகள் குறித்த பட்டியல் சற்று முன் வெளியானது
இந்த பட்டியலின்படி 15 தொகுதிகளில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 5 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன்
மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், ஊத்தங்கரை, ஓமலூர், மேலூர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, அறந்தாங்கி, நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளிலும் காங். - அதிமுக நேரடி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது,.
அதேபோல் குளச்சல், விளவங்கோடு, கோவை தெற்கு, காரைக்குடி, உதகை ஆகிய தொகுதிகளில் பாஜகவுடன் நேரடி போட்டி என்பதும், சோளிங்கர், விருத்தாசலம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் பாமகவுடன் மோதல் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :