செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (15:37 IST)

எல்.கே.ஜி.க்கே இருக்கும்போது, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு இருக்கக்கூடாதா? அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கே நுழைவுத் தேர்வு நடக்கும்போது, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தக்கூடாதா? என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்வு மாணவர்களின் கல்வி சுமையை அதிகரிக்கும் என எதிர்கட்சிகள் உட்பட பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ” தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி.க்கே நுழைவுத் தேர்வு நடக்கும்போது, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடத்தக்கூடாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஏழை மாணவர்களின் கல்வித் தரம் உயரவே பொதுத்தேர்வு” எனவும் கூறியுள்ளார்.