தொடர்புடைய செய்திகள்
- ''குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனை'' - டாக்டர் ராமதாஸ்
- பா ம க இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட சினிமா பிரபலம்!
- பள்ளங்களில் மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன- அன்புமணி ராமதாஸ்
- மயிலாடுதுறை மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: டாக்டர் ராமதாஸ் கண்டனம்!
- ஆறுமுகசாமி அறிக்கையை வைத்து அரசியல் தான் செய்யலாம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
பாமக இளைஞரணித் தலைவர் பதிவியில் ஜி கே எம் தமிழ்க்குமரன்… கட்சிக்குள் சலசலப்பா?
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய இளைஞரணி தலைவராக ஜி கே எம் தமிழ்க் குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாமகவின் தலைவராக பல ஆண்டுகாலம் செயல்பட்டவர் ஜி கே மணி. அவரின் மகனான ஜி கே எம் தமிழ்க்குமரன் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளராக இருக்கிறார். இந்நிலையில் இப்போது அவர் பாமகவின் இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாமகவின் இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து இப்போது அந்த பொறுப்புக்கு ஜி கே எம் தமிழ்க்குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவரின் இந்த நியமனம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக கட்சி தலைவர் அன்புமணி மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு இடையிலும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.
