செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 மே 2022 (14:13 IST)

சட்டசபையில் பாமகவின் சாதனை: புள்ளிவிபரம் தரும் ராமதாஸ்!

ramadoss
சட்டசபையில் சிறப்பாக செயல்பட்ட கட்சி பாமக தான் என புள்ளிவிவரங்களுடன் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:”
 
தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிக வினாக்களை எழுப்பி முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் ஜி.கே.மணி (8,312 வினாக்கள், இரண்டாமிடம்), இரா. அருள் (5,036, நான்காமிடம்) ச.சிவக்குமார் (2,937, ஐந்தாமிடம்) ஆகிய மூவர் பா.ம.க.வினர். அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்
 
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒட்டு மொத்தமாக வரப்பெற்ற 27,713 வினாக்களில் பாமகவின் 3 உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்கள் மட்டும் 16,285.  மொத்த வினாக்களில் இது 59% ஆகும். கட்சி அடிப்படையில் பார்த்தால் அதிக வினாக்களை எழுப்பிய கட்சி பா.ம.க. தான்!
 
சட்டப்பேரவையில் அதிக எண்ணிக்கையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் ஜி.கே. மணி தான். அவையில் முழு நேரம் இருந்தவரும் அவர் தான். மக்கள் நலனில் பா.ம.க. கொண்டுள்ள அக்கறைக்கு  சட்டப்பேரவை செயல்பாடுகளே சாட்சி!