செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 2 மே 2022 (17:04 IST)

தமிழா.... எங்கே உன் பெருமை? பாமக ராமதாஸ் வேதனை

Ramadoss
தமிழா உன் பெருமை எங்கே என டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக பலர் வந்து கொண்டிருக்கின்றனர் 
 
இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு காலத்தில் உலகை கட்டி ஆட்சி செய்த தமிழன் இன்று வாழ வழியின்றி அகதிகளாக செல்வதா என வேதனையுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 
 
தமிழா.... எங்கே உன் பெருமை?
 
தமிழன் என்று சொல்லடா.... தலை நிமிர்ந்து நில்லடா என்றார்கள். ஆனால்,  இன்று இலங்கையில் வாழ வழியின்றி தமிழர்கள் தமிழகத்திற்கு படையெடுக்கின்றனர்.  இன்று குழந்தை உள்ளிட்ட  5 பேர்  இலங்கையிலிருந்து  வந்துள்ளனர். ஈழத்தமிழன் தலை நிமிர்ந்து வாழப்போவது எக்காலம்?