மதமாற்றத்தை தடுத்த பாமக நிர்வாகி கொலை: மெளனம் காக்கும் தமிழ் போராளிகள்

Last Modified வியாழன், 7 பிப்ரவரி 2019 (06:42 IST)
மதவாத கட்சி என்று பாஜக மீது முத்திரை குத்தி வரும் தமிழ்ப்போராளிகள் நேற்று மதமாற்றத்தை தடுத்த பாமக நிர்வாகி ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்டதை குறித்து ஒருவார்த்தை கூறாமல் வாய்மூடி மெளனமாக இருப்பதாக நெட்டிசன்கள் கொதித்தெழுந்துள்ளனர்

மதமாற்றத்தை தட்டிக்கேட்டதாக நேற்று பாமக நிர்வாகி ராமலிங்கம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து ராமதாஸ், தமிழிசை செளந்திரராஜான், எச்.ராஜா தவிர வேறு எந்த அரசியல்வாதிகளும் கண்டிக்கவில்லை

விமானத்தில் கோஷமிடக்கூடாது என்று கூறிய தமிழிசையை அனைத்து கட்சி தலைவர்களும் கண்டித்த நிலையில் தற்போது ஒரு உயிரே போகியுள்ள நிலையில் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காமல் இருக்கும் போலி தமிழ்ப்போராளிகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்று டுவிட்டரில் பலர் பொங்கியுள்ளனர்.


இந்த நிலையில் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கத்தை கொன்றவரை கண்டு பிடிக்க கோரி மறியல் மற்றும் கடை அடைப்பு இன்று நடந்து வருகிறது. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமலிங்கத்தின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது என்றும், அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :