மகனை கொன்று நேரலையில் தற்கொலை செய்த ராணுவ வீரர்: ஃபேஸ்புக்கில் பரபரப்பு

Last Modified புதன், 6 பிப்ரவரி 2019 (07:20 IST)
ஃபேஸ்புக் நேரலையில் கொலை செய்வது, தற்கொலை செய்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் ராணுவ வீரர் ஒருவர் தனது 5 வயது மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஜோவோனி மெக்லண்டன் ஜூனியர் என்பவருக்கு 27 வயத்ஹில் ஒரு காதலியும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 3-ம் தேதியன்று தன்னுடைய தாய்க்கு போன் செய்த ஜோவோனி, நான் என்னுடைய மகனையும், மனைவியையும் கொன்றுவிட்டேன் என கூறிவிட்டு போனை வைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் ஃபேஸ்புக்கில் நேரலை செய்யப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக அவருடைய வீட்டிற்கு விரைந்த போலீஸார், உள்ளே சென்று பார்த்தபோது ஜோவோனி மற்றும் அவருடைய 5 வயது மகன் இறந்த நிலையில் கிடந்தனர். அதேசமயம் அவருடைய காதலி, கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :