புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (16:21 IST)

ஏன்யா மதம் மாற சொல்றீங்க? தட்டிகேட்ட பாமக பிரமுகர்; அரங்கேறிய விபரீதம்!!

மதம் மாற சொல்லி வற்புறுத்திவர்களை தட்டிக்கேட்ட பாமக பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருந்ததாக தெரிகிறது. மேலும் கேட்டரிங் ஏஜென்ட்டாகவும் இருக்கிறார்.
 
இந்நிலையில் ராமலிங்கம் வேலை நிமித்தமாக அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆங்கிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த கும்பல் ஒன்று மதம் மாற சொல்லி வற்புறுத்தியது. இதனை ராமலிங்கம் தட்டிக்கேட்டுள்ளார். 
 
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ராமலிங்கம் வண்டியில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள், அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பித்தனர்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ராமலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருப்பதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.