கள்ளக்காதலில் தத்தளித்த மனைவி? கொடூரமாக கொலை செய்த சினிமா இயக்குனர்

dead
Last Updated: புதன், 6 பிப்ரவரி 2019 (12:52 IST)
சென்னை பெருங்குடியில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் கை கால்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்காதிருந்த நிலையில் தற்போது அவரின் கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் இளம்பெண் ஒருவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒரு பையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அங்கிருந்தவர்கள் இதுகுறித்து புகார் அளிக்க போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் போலீஸார் குற்றவாளியை நெருங்க முடியாமல் திணறி வந்தனர்.
 
இந்நிலையில் இரண்டு வார தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீஸார் அந்த பெண்ணின் கணவரை சுற்றி வளைத்தனர். அந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா ஆவார். இவரின் கணவர் சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு காதல் இலவசம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
direc
 
இதற்கிடையே மனைவி வேறு ஒரு நபருடன் பழகி வருவதாக சந்தேகித்த பாலகிருஷ்ணன், சந்தியாவை கொடூரமாக கொலை செய்து அவரின் உடல் பாகங்களை ஆங்காங்கே வீசியுள்ளார். போலீஸார் ராமகிருஷ்ணனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :