1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 20 ஜூலை 2022 (18:32 IST)

சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறாரா?

Modi
தமிழகத்தில் 42வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் இருபத்தி எட்டாம் தேதி ஆரம்பமாக இருக்கும் நிலையில் அன்றைய தினம் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
செஸ் ஒலிம்பிக் போட்டியை தொடங்கி வைக்க ஜூலை 28-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது