1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (11:31 IST)

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை: தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி!

BJP Modi
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் படிப்படியாக குணமாகி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
இந்த நிலையில் முதல்வர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விசாரித்தார் என தகவல் வெளிவந்துள்ளது.