திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2024 (14:03 IST)

பிரதமர் மோடியின் நாளைய சென்னை பயணத்திட்டம். முழுவிவரங்கள் இதோ!

Modi
பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருக்கும் நிலையில் அவருடைய பயணம் திட்டம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது அந்த திட்டம் குறித்து தற்போது பார்ப்போம்..
 
மகாராஷ்டிராவில் இருந்து வரும் பிரதமர் மோடி பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.20 மணிக்கு கல்பாக்கம், செல்கிறார்
 
கல்பாக்கத்தில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் வருகிறார். 
 
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அவர், மாலை 6.15 மணிக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹைதராபாத் செல்கிறார்.
 
Edited by Siva