1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. PM Modi visit chennai on june 20

தேர்தல் முடிந்த பின்னர் சென்னை வரும் பிரதமர் மோடி.. வந்தே பாரத் ரயில் துவக்கவிழா..!

PM Modi
தேர்தலுக்கு முன்னர் தமிழகத்திற்கு பலமுறை வந்த பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனம் எழுந்தது என்பதும் தேர்தல் முடிந்த பின்னர் அவர் தமிழகம் பக்கமே வர மாட்டார் என்று எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்தன என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் தேர்தல் முடிந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி ஜூன் 20ஆம் தேதி சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இதனை அடுத்து தமிழக பாஜக பிரதமர் மோடியை வரவேற்க தகுந்த ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பிரதமரின் சென்னை வருகையை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 
அடுத்த கட்டுரையில்
மாணவர்களுக்கு குட் நியூஸ்..! இந்த மாதத்தில் இருந்து ரூ.1000 உதவி தொகை..!