செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஜனவரி 2022 (09:13 IST)

சமூக நீதியின் சிறந்த தலைவர் எம்ஜிஆர்! – பிரதமர் மோடி புகழாரம்!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளான இன்று அவர் குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

அதிமுக கட்சியை தொடங்கியவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் எம்ஜிஆர் குறித்து தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!” என்று கூறியுள்ளார்.