1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (10:02 IST)

இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: தமிழக அரசு கொண்டாட முடிவு!

இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: தமிழக அரசு கொண்டாட முடிவு!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு அவருடைய பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 17-ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அதனை அடுத்து இன்று ஏழைகளின் விடிவெள்ளியாய் இருந்த மறைந்த டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மறைந்த முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆரின் புகைப்படத்தை வீடுகள் தோறும் வீதிகள் தோறும் வைத்து மக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் எம்ஜிஆரின் பிறந்த நாளை தமிழக அரசு கொண்டாடும் என சமீபத்தில் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து இன்று தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது