மாமன்னர் பூலித்தேவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்.!
மாமன்னர் பூலித்தேவனுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்.!
மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் இன்று தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி பூலித்தேவனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவரின் வீரமும் உறுதியும் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளத்தில் தமிழில் புகழாரம் சூட்டியுள்ளார்
முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டவர் என்றும் மக்களுக்காக எப்போதும் வராது பாடுபட்டவர் என்றும் அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:
மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்.