திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (10:54 IST)

அதை சொல்லி மோடி கண் கலங்கினார்.. நானும் அழுதேன்! – குலாம் நபி ஆசாத்!

காங்கிரஸிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தற்போது பிரதமர் மோடி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவரும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான குலாம் நபி ஆசாத் காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் ராகுல்காந்தி வருகை மற்றும் காங்கிரஸில் இருந்த அதிருப்திகளை தெரியப்படுத்தி உள்ளார். காங்கிரஸை குறை கூறிய குலாம் நபி ஆசாத் தற்போது பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார்.


“பிரதமர் மோடி குடும்பம், குழந்தைகள் இல்லாதவர் என்பதால் அவர் முரட்டுத்தனமானவர் என்று நினைத்தேன். ஆனால் அவர் மனிதாபிமானம் படைத்த மனம் கொண்டவர் என்பதை பின்னர்தான் தெரிந்து கொண்டேன்” என கூறியுள்ளார்.

மேலும் 2007ல் காஷ்மீர் சுற்றுலா சென்ற குஜராத் பயணிகள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டனர். அப்போது காஷ்மீர் முதல்வராக குலாம் நபி ஆசாத்தும், குஜராத் முதல்வராக மோடியும் இருந்தனர். மாநிலங்களவையில் நடந்த பிரிவு உபச்சார விழாவின் போது அந்த சம்பவத்தை தன்னிடம் நினைவு கூர்ந்து பிரதமர் மோடி கண்ணீர் வடித்ததாகவும், அவரது பேச்சால் தானும் கண்கலங்கி விட்டதாகவும் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.